Sunday, April 26, 2009

ஆத்திகப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்றைய தினமலரில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு சமயம் லட்சுமி கண்ணுவ முனிவரின் சாபத்தால் மான் வடிவை அடைந்தாள்.பல இடங்களில் அலைந்து திரிந்தபின்,திருமால் யோக மூர்த்தியாக அமர்ந்திருந்த பர்ணசாலைக்கு வந்தாள்.அவளைக்கண்ட திருமால் அன்புடன் பார்த்தார்.அந்த மான் கருவுற்றது. கருவுற்ற அவள் வள்ளிகிழங்கு எடுத்த குழியில் குழந்தையை இட்டாள்.வேடர்கள் அக்குழந்தையை எடுத்து வளர்த்தனர்.வள்ளி என்னும் பெயரில் வளர்ந்த அந்தப்பெண் தவம் செய்து முருகனை மணந்தாள்.



இப்படி இன்றைய தினமலரில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சரித்திரம் அதாவது "வள்ளி அவதார மகிமை" குறித்து யாருக்காவது தெரியுமா?



சக வலைப்பதிவர்களான குமரன்,சிவமுருகன்,என்றென்றும் அன்புடன் பாலா,வீஎஸ்கே,கீதா சாம்பசிவம், G.ராகவன் போன்ற ஆத்திகத் தோழர்கள்
மேற்கொண்டு விளக்கம் அல்லது பதில் அளிக்க வேண்டுகிறேன்.



எந்தச் செய்தியையும் பகுத்தறிந்து அலசும் கோவிகண்ணன் போன்றோரும் தங்களுக்குத் தெரிந்தால் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.


நான் ஒரு ஆத்திகன்.தினமும் இறைவனை வணங்காமல் எந்தப் பணியும் தொடங்கியதே இல்லை.எனை ஆளும் முருகன் மீது ஆணையாகக் கூறுகிறேன்.யாரையும் புண்படுத்துவதோ கிண்டல் செய்வதோ என் வேலை இல்லை.இப்படி ஒரு செய்தி நாடறிந்த தமிழ் நாளிதழில் வெளியாகும் போது மனது கொஞ்சம் அதிகமாகவே நெருடுகிறது.எனவே தான் கேட்கிறேன்.என்னைத் தெளிவடைய வைக்கும்ப‌டி கேட்டுக் கொள்கிறேன்.

ஜட்டியை அறிமுகம் செய்வது எப்படி?

பழனி அடிவாரத்திலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் சன‌(பண)நாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.அமைச்சர் பெரியசாமி உள்பட திமுக,காங்கிரசு,விடுதலைச் சிறுத்தைக் கட்சி ஆகியவைகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் மேடை மீது ஏறி ஆடியும் பாடியும் கோஷமிட்டும் முழக்கங்கள் செய்தனராம்.சிலர் ஜட்டியுடன் மேடையில் ஆடினார்களாம்.


ஜட்டியை இப்படியும் அறிமுகம் செய்யலாம் என்றுவழி கண்டுபிடித்து அதை உடனே செயல் படுத்திய விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் வால்க!இத்தகைய ஜட்டிமிகு அமைப்பினரைச் சேர்த்துக் கொண்ட சன‌(பண)நாயக முற்போக்குக் கூட்டணி வால்க வால்க!!

ச்சீ!அப்படி உழைத்து உழைத்து எதைக் கண்டேன்?

சிங்கிள் டீ குடித்துவிட்டு மணிக்கணக்கில் பணியாற்றக் கூடியவர்கள் திமுகவினர் என்று ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் பாராட்டியதாகக் கருணாநிதி ஒரு அறிக்கையில் கூறியுள்ளாராம்.அப்படிப் பணியாற்றக்கூடியவர்களிடம் மேலும் மேலும் அத்தகைய பணிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறியுளார்.


'ச்சீ!அப்படி உழைத்து உழைத்து எதைக் கண்டேன்?நீயும் உன் கூட்டாளிகளும் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது தான் மிச்சம்.நாங்கள் இன்னும் குடிசையில் தான் இருக்கிறோம்.ஆனால் நீ?தயாநிதி மாறன்,அழகிரி தாக்கல் செய்துள்ள சொத்து விபரங்களைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.திமுக காரன் என்று வெளியில் சொல்லிக் கொள்ளவே கூசுகிறது.
சிங்கிள் டீ குடித்துவிட்டு மணிகணக்கில் என்ன நாட்கணக்கில் கூடப் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் ஆனால் உனக்கல்ல' என்று ஒரு திமுக தொண்டன் கூறுகிறான்.

Friday, April 24, 2009

காங்கிரசின் சந்தர்ப்பவாதம்

பார்லிமெண்ட் தாக்குதல் விவகாரத்தில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவைத் தூக்கிலிடுவதில் காங்கிரசுக்குப் பிரச்சனை இல்லை என்று காங்கிரசு மூத்த தலைவர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.அப்சல்குருவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பினும் அவனது கருணை மனு குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் இருப்பதால் தான் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறியுள்ளார்.இது பத்திரிக்கை செய்தி.

தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை அப்பதவியிலிருந்து நீக்குமாறு பரிந்துரை செய்து குடியரசுத் தலைவருக்குச் சென்ற‌ சனவரி மாதம்16ந் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கடிதம் அனுப்பினார்
மத்திய அரசு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு, கோபாலசாமியின் பரிந்துரையை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை, அதை நிராகரித்து விடலாம் என கடிதம் எழுதியது.

மத்திய அரசின் பரிந்துரை, அரசியலமைப்பு வழிமுறைகள் மற்றும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், கோபால்சாமியின் பரிந்துரையை பிப்ரவரி 2ந் தேதி தள்ளுபடி செய்து விட்டார்.இவ்வளவும் பதினைந்தே நாட்களில் நடந்து முடிந்து விடுகிறது.

ஆக‌ நாடு த‌ழுவிய‌ ஒரு முக்கிய‌மான‌ பிர‌ச்ச‌னையில் குடிய‌ர‌சுத்த‌லைவரால் பதினைந்து நாட்களுக்குள்ளாகவே முடிவு எடுக்க முடிகிற‌து.அப்ச‌ல்குருவின் க‌ருணை ம‌னு மீது ஒன்ற‌ரைஆண்டுகளுக்கு மேலாகியும் குடியரசுத்தலைவரால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை என்றால்?

அரசியல்வாதிகளின் இத்தகைய அயோக்கிய குணத்தைப் பற்றி முன்னொரு சமயம் கல்கி எழுதினாராம்."ஒரு பிரச்சனையில் முடிவெடுக்க விரும்பவில்லை என்றால் அதன் மீது கல்லைப் போடு.அல்லது ஒரு கமிட்டியைப் போடு"என்று எழுதியதாக ஞாபகம்.அத்துடன்"குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வை"என்று சேர்த்துக் கொள்ளலாம்.

Wednesday, April 22, 2009

"உங்களுக்கு வெதரு சரியில்லீங்க!"

தென்னாப்பிரிக்காவில் பெய்துவரும் மழை காரணமாகக் கிரிக்கெட் ஆட்டம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.இதனால் கவலை அடைந்த ஐபிஎல் தலைவர் லலித் மோடி அங்கிருந்த வானிலை ஆராய்ச்சி அதிகாரியிடம்,"என்னங்க இப்படி மழை பெய்கிறது?"என்று கேட்டாராம்.அதற்குஅந்த வானிலை அதிகாரி சொன்ன பதில்,"உங்களுக்கு வெதரு சரியில்லீங்க!"

Tuesday, April 21, 2009

"போடா போடா!நம்ம நாட்டிலெ கடவுளே கால்நடையாப் போறாரு.பூசாரிக்குப் புல்லட் கேக்குதோ!!

சென்னை உயர்மன்ற நீதிபதி ரகுபதியும் அவரது உதவியாளரும் மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காகக் கிங் பிச‌ஷ‌ர் ஏர்லைன்சு விமானத்தில் சீட்டு(டிக்கெட்) வாங்கினார்கள்.ஆனால் சில தொழில்நுட்பக் காரணங்களுக்காக அவர்கள் செல்ல வேண்டிய விமானம் இரத்து செய்யப்பட்டது.நீதிபதி அவசரமாகச் சென்னை செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியதனால் கிங் பிசர் அலுவலர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்தனர் அதாவது அப்போது கோவை வழியாகச் சென்னைக்குப் புறப்பட்ட செட்(ஜெட்)ஏர்வேசு விமானத்தில் நீதிபதி,அவரது உதவியாளர் மற்றும் ஏழு இதர பயணிகள் ஆகியோரை ஏற்றி அனுப்பி வைத்தனர்.


பயணத்தின்போது இவர்களைத் தவிர விமானத்தில் இருந்த மற்ற பயணிகளுக்கெல்லாம் உணவு வழங்கப்பட்டது.நீதிபதி,அவரது உதவியாளர் மற்றும் ஏழு இதர பயணிகளுக்கு உணவு வழங்க மறுக்கப்பட்டது.நீதிபதி கேட்டதற்கு"எங்கள் பயணிகளுக்கு மட்டுமே உணவு ஆர்டர் செய்திருந்தோம்.‌நீங்களெல்லாம் கிங் பிசர் பயணிகள்.எனவே உங்களுக்கு உணவு வழங்க முடியாது"என்று தெரிவித்தனராம்.


அவமானப்படுவதாக உணர்ந்த நீதிபதி சென்னை வந்ததும் தனது உதவியாளர் மூலமாக சென்னை புற நகர் காவல்துறைத் தலைவருக்குப் புகார் செய்திருக்கிறார்.காவல்துறைத் தலைவர் உடனே ஒரு உதவி ஆணையரை அனுப்பி விசாரித்து செட் ஏர்வேசின் மேல் தவறு இருப்பதை உறுதி செய்தபின் நீதிபதியின் உதவியாளரிடமிருந்து எழுத்து மூலமாக‌‌ப் புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரணை தொடந்துள்ளார்.


இது தொடர்பாக காவல்துறை உயர் அலுவலர்கள் நேற்று மாலை செட் ஏர்வேசு அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த அலுவலர்களை நோண்டி நுங்கெடுத்ததாக(விசாரணை செய்ததாக)த் தெரிகிறது.


எனக்கொரு சந்தேகம்.


மதுரையிலிருந்து சென்னை செல்வதற்கு தேவையான அளவு பெட்ரோல் 100லிட்டர் என்று வைத்துக் கொள்வோம்.ஒருக்கால் சென்னை சென்ற விமானம் வானிலை சரியில்லாத காரணத்தாலோ வேறு தொழில் நுட்பக் காரணங்களாலோ அங்கே இறங்க முடியாத நிலை ஏற்பட்டால் வேறு விமான நிலையத்தில் போய் இறங்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படுகிறது.சில சமயம் அங்கேயே வானத்தில் அரை மணி நேரம் கூட வட்டமிட்டபடியே இருக்கும்.‌அப்போது விமானத்தில் இருந்த 100 லிட்டர் பெட்ரோல் போதாது.இதனால்தான் போய்ச் சேர வேண்டிய ஊர்வரை பறப்பதற்குத் தேவையான பெட்ரோலைவிட 100 அல்லது 150 விழுக்காடு வரை கூடுதலாகப் பெட்ரோலை நிரப்புவார்கள்.


அதே மாதிரி தான் உணவும் குடிநீரும் ஏற்றப்படும்.


படிச்சவங்க விவரந்தெரிஞ்சவங்க யாராவது மேல் விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.



ஒருக்கால் செட் ஏர்வேசு பயணிகளுக்கு மட்டுமே மதுரையில் உணவு ஏற்றப்பட்டிருந்ததாக வைத்துக் கொள்வோம்.விமானம் கோவை வழியாகத் தானே சென்றது?கோவையில் பயணிகள் ஏறும் போது அதிகப் படியான உணவையும் கோவையிலேயே பெற்று இவர்களுக்கு வழங்கியிருக்கலாமே!


கேட்டால்"அது எங்க வேலை இல்லை"என்பார்களோ!


அதெல்லாம் வேறு ஒண்ணுமில்லீங்க.


திமிரு.


இன்னொரு சந்தேகம்.


நீதிபதிக்கே இப்படீன்னா மற்ற சாதாரணப் பயணிகளுக்கு?


"போடா போடா!நம்ம நாட்டிலெ கடவுளே கால்நடையாப் போறாரு.பூசாரிக்குப் புல்லட் கேக்குதோ!!

கருணாநிதியின் கபட நாடகமும் சுடாலினின் சொந்த புத்தியும்

தேர்தல் பிரச்சாரத்திற்காகக் கன்னியாகுமரி வந்துள்ள அமைச்சர் சுடாலின்(நன்றி கோவி கண்ணன்)கீழ்க்"கண்டபடி" கூறியுள்ளதாக தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது.
"இலங்கை பிரச்னையை அரசியல் ரீதியாக கிளப்பி விட்டுள்ளனர். மக்கள் இதை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை. இலங்கை பிரச்னையில் தி.மு.க., 1956 முதல் போராட்டம் நடத்தி வருகிறது."

அடப்பாவிகளா!

அப்படீன்னா ஒங்கப்பன் நாளைக்குத் தமிழ்நாடு முழுதும் வேலைநிறுத்தம் நடக்கும் என்று அறிவித்திருக்கிறாரே! அதுலேயும் தமிழக மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாரே!

அதெல்லாம் யாருக்காக?மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாதபோது வேலை நிறுத்தம் யாருக்காக?

ஒருவேளை மக்கள் என்று சுடாலின் சுட்டியது கருணாநிதியின் மக்களைத் தான்,தமிழ்நாட்டு மக்களை அல்ல என்று எடுத்துக் கொள்ளலாமா?

நீங்க‌ 1956லிருந்து போராடிய‌து எல்லாம் (க‌ருணாநிதியின்) ம‌க்க‌ளுக்கும் உற‌வின‌ர்க‌ளுக்கும் சொத்து சேர்க்க‌த்தானே!போறும் போறும்ன்ற அளவுக்குப் பொட்டி நெரம்பியாச்சு.அப்புறம் இப்படித்தானே பேச்சு வரும்?

ந‌டைபெற‌விருக்கும் பாராளும‌ன்ற‌ப் பொதுத் தேர்த‌லில் நீங்க‌ தோற்க‌ப் போவ‌து ம‌ட்டும‌ல்ல‌,இத்த‌கைய‌ பேச்சுக்க‌ளால் டிபாசிட் இழ‌ந்தாலும் விய‌ப்ப‌த‌ற்கில்லை.‌