Tuesday, April 21, 2009

"போடா போடா!நம்ம நாட்டிலெ கடவுளே கால்நடையாப் போறாரு.பூசாரிக்குப் புல்லட் கேக்குதோ!!

சென்னை உயர்மன்ற நீதிபதி ரகுபதியும் அவரது உதவியாளரும் மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காகக் கிங் பிச‌ஷ‌ர் ஏர்லைன்சு விமானத்தில் சீட்டு(டிக்கெட்) வாங்கினார்கள்.ஆனால் சில தொழில்நுட்பக் காரணங்களுக்காக அவர்கள் செல்ல வேண்டிய விமானம் இரத்து செய்யப்பட்டது.நீதிபதி அவசரமாகச் சென்னை செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியதனால் கிங் பிசர் அலுவலர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்தனர் அதாவது அப்போது கோவை வழியாகச் சென்னைக்குப் புறப்பட்ட செட்(ஜெட்)ஏர்வேசு விமானத்தில் நீதிபதி,அவரது உதவியாளர் மற்றும் ஏழு இதர பயணிகள் ஆகியோரை ஏற்றி அனுப்பி வைத்தனர்.


பயணத்தின்போது இவர்களைத் தவிர விமானத்தில் இருந்த மற்ற பயணிகளுக்கெல்லாம் உணவு வழங்கப்பட்டது.நீதிபதி,அவரது உதவியாளர் மற்றும் ஏழு இதர பயணிகளுக்கு உணவு வழங்க மறுக்கப்பட்டது.நீதிபதி கேட்டதற்கு"எங்கள் பயணிகளுக்கு மட்டுமே உணவு ஆர்டர் செய்திருந்தோம்.‌நீங்களெல்லாம் கிங் பிசர் பயணிகள்.எனவே உங்களுக்கு உணவு வழங்க முடியாது"என்று தெரிவித்தனராம்.


அவமானப்படுவதாக உணர்ந்த நீதிபதி சென்னை வந்ததும் தனது உதவியாளர் மூலமாக சென்னை புற நகர் காவல்துறைத் தலைவருக்குப் புகார் செய்திருக்கிறார்.காவல்துறைத் தலைவர் உடனே ஒரு உதவி ஆணையரை அனுப்பி விசாரித்து செட் ஏர்வேசின் மேல் தவறு இருப்பதை உறுதி செய்தபின் நீதிபதியின் உதவியாளரிடமிருந்து எழுத்து மூலமாக‌‌ப் புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரணை தொடந்துள்ளார்.


இது தொடர்பாக காவல்துறை உயர் அலுவலர்கள் நேற்று மாலை செட் ஏர்வேசு அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த அலுவலர்களை நோண்டி நுங்கெடுத்ததாக(விசாரணை செய்ததாக)த் தெரிகிறது.


எனக்கொரு சந்தேகம்.


மதுரையிலிருந்து சென்னை செல்வதற்கு தேவையான அளவு பெட்ரோல் 100லிட்டர் என்று வைத்துக் கொள்வோம்.ஒருக்கால் சென்னை சென்ற விமானம் வானிலை சரியில்லாத காரணத்தாலோ வேறு தொழில் நுட்பக் காரணங்களாலோ அங்கே இறங்க முடியாத நிலை ஏற்பட்டால் வேறு விமான நிலையத்தில் போய் இறங்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படுகிறது.சில சமயம் அங்கேயே வானத்தில் அரை மணி நேரம் கூட வட்டமிட்டபடியே இருக்கும்.‌அப்போது விமானத்தில் இருந்த 100 லிட்டர் பெட்ரோல் போதாது.இதனால்தான் போய்ச் சேர வேண்டிய ஊர்வரை பறப்பதற்குத் தேவையான பெட்ரோலைவிட 100 அல்லது 150 விழுக்காடு வரை கூடுதலாகப் பெட்ரோலை நிரப்புவார்கள்.


அதே மாதிரி தான் உணவும் குடிநீரும் ஏற்றப்படும்.


படிச்சவங்க விவரந்தெரிஞ்சவங்க யாராவது மேல் விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.



ஒருக்கால் செட் ஏர்வேசு பயணிகளுக்கு மட்டுமே மதுரையில் உணவு ஏற்றப்பட்டிருந்ததாக வைத்துக் கொள்வோம்.விமானம் கோவை வழியாகத் தானே சென்றது?கோவையில் பயணிகள் ஏறும் போது அதிகப் படியான உணவையும் கோவையிலேயே பெற்று இவர்களுக்கு வழங்கியிருக்கலாமே!


கேட்டால்"அது எங்க வேலை இல்லை"என்பார்களோ!


அதெல்லாம் வேறு ஒண்ணுமில்லீங்க.


திமிரு.


இன்னொரு சந்தேகம்.


நீதிபதிக்கே இப்படீன்னா மற்ற சாதாரணப் பயணிகளுக்கு?


"போடா போடா!நம்ம நாட்டிலெ கடவுளே கால்நடையாப் போறாரு.பூசாரிக்குப் புல்லட் கேக்குதோ!!

4 comments:

பரிசல்காரன் said...

கஸ்டமர் கேர் எல்லாம் நம்ம நாட்டுல கண் துடைப்புதான் தோழரே. சாதாரண டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலேயே சாதாரண கஸ்டமரை கொஞ்சமும் மதிப்பதில்லை. அதே தஸ் புஸ் என்று பீட்டர் விடும் மேல்தட்டு ஆசாமிகள் என்றால் தனி மரியாதைதான்.

தராசு said...

//கஸ்டமர் கேர் எல்லாம் நம்ம நாட்டுல கண் துடைப்புதான் தோழரே. சாதாரண டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலேயே சாதாரண கஸ்டமரை கொஞ்சமும் மதிப்பதில்லை. அதே தஸ் புஸ் என்று பீட்டர் விடும் மேல்தட்டு ஆசாமிகள் என்றால் தனி மரியாதைதான்.//

கன்னா பின்னானு வழிமொழிகிறேன்.

இந்த விமான சர்வீஸ் காரங்க கிட்ட சிக்கிட்டு பல வேளைகளில் நொந்து நூலாகியவர்களில் அடியேனும் ஒருவன். போதுமான பயணிகள் இல்லைனா, தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானம் புறப்படாது, நீங்கள் ப்ஸ்ஸில் செல்லுங்கள் என்று அனுப்பி வைத்து, ஒரு காட்டுக்குள் பஸ் ரிப்பேராகிப்போய், முழு இரவிஅயும் மத்தியபிரதேச காட்டுக்குள் கழித்த அனுபவமும் எனக்கு உள்ளது.

மாண்புமிகு பொதுஜனம் said...

வாங்க பரிசல்காரன்,தராசு.நன்றி

Naresh Kumar said...

இதே நீதிபதிங்கறதுனால, போலீஸ் போயி நோண்டி நொங்கு எடுத்தாங்க. சாதா ஆளா இருந்தா எடுத்துருப்பானுங்களா?

நியாயமும், தர்மமும் வல்லானுக்குத்தானோ!!!

Post a Comment