Friday, April 24, 2009

காங்கிரசின் சந்தர்ப்பவாதம்

பார்லிமெண்ட் தாக்குதல் விவகாரத்தில் தொடர்புடைய பயங்கரவாதி அப்சல் குருவைத் தூக்கிலிடுவதில் காங்கிரசுக்குப் பிரச்சனை இல்லை என்று காங்கிரசு மூத்த தலைவர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.அப்சல்குருவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பினும் அவனது கருணை மனு குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் இருப்பதால் தான் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறியுள்ளார்.இது பத்திரிக்கை செய்தி.

தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை அப்பதவியிலிருந்து நீக்குமாறு பரிந்துரை செய்து குடியரசுத் தலைவருக்குச் சென்ற‌ சனவரி மாதம்16ந் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கடிதம் அனுப்பினார்
மத்திய அரசு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு, கோபாலசாமியின் பரிந்துரையை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை, அதை நிராகரித்து விடலாம் என கடிதம் எழுதியது.

மத்திய அரசின் பரிந்துரை, அரசியலமைப்பு வழிமுறைகள் மற்றும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், கோபால்சாமியின் பரிந்துரையை பிப்ரவரி 2ந் தேதி தள்ளுபடி செய்து விட்டார்.இவ்வளவும் பதினைந்தே நாட்களில் நடந்து முடிந்து விடுகிறது.

ஆக‌ நாடு த‌ழுவிய‌ ஒரு முக்கிய‌மான‌ பிர‌ச்ச‌னையில் குடிய‌ர‌சுத்த‌லைவரால் பதினைந்து நாட்களுக்குள்ளாகவே முடிவு எடுக்க முடிகிற‌து.அப்ச‌ல்குருவின் க‌ருணை ம‌னு மீது ஒன்ற‌ரைஆண்டுகளுக்கு மேலாகியும் குடியரசுத்தலைவரால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை என்றால்?

அரசியல்வாதிகளின் இத்தகைய அயோக்கிய குணத்தைப் பற்றி முன்னொரு சமயம் கல்கி எழுதினாராம்."ஒரு பிரச்சனையில் முடிவெடுக்க விரும்பவில்லை என்றால் அதன் மீது கல்லைப் போடு.அல்லது ஒரு கமிட்டியைப் போடு"என்று எழுதியதாக ஞாபகம்.அத்துடன்"குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வை"என்று சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment